சமீபத்தில் வந்த லயன்-முத்து காமிக்ஸ்-ல்
ஒரு வித்தியாசமான கருத்தோடு என்னை கவர்ந்தது LMS-ல் வந்த மர்ம மனிதன் மார்ட்டின் தோன்றும் “கட்டத்தில் ஒரு வட்டம்...!”
புதிர் அரங்கங்களை பற்றிய கதை. வரலாற்று
பின்னணியில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆக்கியன், மால்டா புதிர் அரங்கம், கிரேக்க
புராணக் கதைகளில் வந்த டெடாலஸு குறிப்புகளையும் கொண்ட கதை.
இந்த கதைப்படி ஆர்னால்டு பார்ட்லெட் என்ற
பணக்காரன் புதிதாக ஒரு புதிர் அரங்கம் கட்ட விளைவதையும் அதற்கு டெரெக் நோய்ஸ் என்ற
கட்டிட வரைபவரை பயன்படுத்திவிட்டு பின்பு அவரை அந்த புதிர் அரங்கத்தினுள் மார்ட்டின்
மனைவி டயானாவுடன் மாட்டிவிடுவதும், மார்ட்டின்யும் பார்ட்லெட்டும் ஆப்பிரிக்க
புதிர் அரங்கத்தில் மாட்டிக்கொண்டு தப்பித்து வெளிவருவது போன்ற கதை.
பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்து
புதிரில் தரப்பட்டிருந்த விளக்கமான “சுவரில் வலது கையை வைத்தவாறு இடையில்
எக்காரணம் கொண்டும் அதை எடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றாய் எனில் முடிவில் அது
உன்னை வெளி வாயிலுக்கு கொண்டு போய் சேர்த்துவிடும்” என்ற எளிய முறையில் டயானா
புதிர் அரங்கத்தைவிட்டு வெளி வருவது சிறப்பானது.
இது போன்ற குறுக்கெழுத்து புதிர் நமது
முத்து காமிக்ஸில் வந்துள்ளது.
இந்த கதையை படித்தவுடன் இந்தமாதிரி புதிர்
அரங்கங்கள் நமது தமிழ் நாட்டில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்று வந்த இந்த தகவல் நாமும் இது போன்ற
கலாசாரத்துக்கு சொந்தகாரர்கள் என்று தெரிய வருகிறது, அதுவும்
2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று
அறியும் பொழுது நாமும் பெருமைபடுவோம். இது போன்ற கதைகளை நமது ஆசிரியர்
திரு.எஸ்.விஜயன் அவர்களால் மட்டுமே தமிழில் வெளியிடமுடியும்.
+1
பதிலளிநீக்குgood one Friend !
நன்றி
பதிலளிநீக்குசூப்பரான தகவ்ல் சார்.
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவிடுங்கள்.
நன்றி
நீக்குGood News. Thanks for sharing.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு