மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தமிழ் நாட்டில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிர் அரங்கம்



சமீபத்தில் வந்த லயன்-முத்து காமிக்ஸ்-ல் ஒரு வித்தியாசமான கருத்தோடு என்னை கவர்ந்தது  LMS-ல் வந்த மர்ம மனிதன் மார்ட்டின் தோன்றும் “கட்டத்தில் ஒரு வட்டம்...!”



புதிர் அரங்கங்களை பற்றிய கதை. வரலாற்று பின்னணியில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆக்கியன், மால்டா புதிர் அரங்கம், கிரேக்க புராணக் கதைகளில் வந்த டெடாலஸு குறிப்புகளையும் கொண்ட கதை.
இந்த கதைப்படி ஆர்னால்டு பார்ட்லெட் என்ற பணக்காரன் புதிதாக ஒரு புதிர் அரங்கம் கட்ட விளைவதையும் அதற்கு டெரெக் நோய்ஸ் என்ற கட்டிட வரைபவரை பயன்படுத்திவிட்டு பின்பு அவரை அந்த புதிர் அரங்கத்தினுள் மார்ட்டின் மனைவி டயானாவுடன் மாட்டிவிடுவதும், மார்ட்டின்யும் பார்ட்லெட்டும் ஆப்பிரிக்க புதிர் அரங்கத்தில் மாட்டிக்கொண்டு தப்பித்து வெளிவருவது போன்ற கதை.
பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்து புதிரில் தரப்பட்டிருந்த விளக்கமான “சுவரில் வலது கையை வைத்தவாறு இடையில் எக்காரணம் கொண்டும் அதை எடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றாய் எனில் முடிவில் அது உன்னை வெளி வாயிலுக்கு கொண்டு போய் சேர்த்துவிடும்” என்ற எளிய முறையில் டயானா புதிர் அரங்கத்தைவிட்டு வெளி வருவது சிறப்பானது.

இது போன்ற குறுக்கெழுத்து புதிர் நமது முத்து காமிக்ஸில் வந்துள்ளது.



இந்த கதையை படித்தவுடன் இந்தமாதிரி புதிர் அரங்கங்கள் நமது தமிழ் நாட்டில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை.  ஆனால் இன்று வந்த இந்த தகவல் நாமும் இது போன்ற கலாசாரத்துக்கு சொந்தகாரர்கள் என்று தெரிய வருகிறது, அதுவும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறியும் பொழுது நாமும் பெருமைபடுவோம். இது போன்ற கதைகளை நமது ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் அவர்களால் மட்டுமே தமிழில் வெளியிடமுடியும்.


ஞாயிறு, 13 ஜனவரி, 2013

முத்து காமிக்ஸ் தகவல், SUNDAY TIMES OF INDIA, CHENNAI JANUARY 13,2013

சென்னை புத்தக கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் திரு. M.சௌந்திரபாண்டியன், ஆசிரியர் S.விஜயன் மற்றும் அவரது மகன் திரு.V.விக்ரம் உடன் எனது மகன் ப.அஜய் நிகிலேசன் இருப்பது எங்களுக்கு பெருமை. அனைவருக்கும் நன்றிகள்.

திங்கள், 17 டிசம்பர், 2012


"பெரியதொரு புன்னகையோடு சயனம் செய்யும் பூனை"